Tuesday, November 11, 2014

ஜெட் ஏர்வேஸ்



ஜெட் ஏர்வேஸ் இந்தியாவில் மும்பை நகரத்தில் மூல தளம் கொண்டுள்ள ஒரு விமானப் போக்குவரத்து நிறுவனமாகும். இது இந்தியாவிலேயே ஏர் இந்தியாவிற்கு அடுத்தபடியான பெரும் விமான நிறுவனம் மற்றும் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சந்தையில் முன்னணி வகிக்கிறது. இது உலகெங்கும் 68 பயண இலக்குகளுக்காக தினந்தோறும் 400 விமான ஊர்திகளை இயக்குகிறது.
ஜூலை 2008ஆம் ஆண்டு எது? என்னும் பத்திரிகை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக உலகின் மிகச் சிறந்த நீண்ட தூர இழுவை என்று ஜெட் ஏர்வேஸை தரப்படுத்தியது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்மார்ட்டிராவல்ஏஷியா.காம் நடத்திய ஒரு வாக்கெடுப்பில், ஒட்டு மொத்தமாக உலகில் ஏழாவது சிறந்த விமான நிறுவனமாக இது வாக்களிக்கப்பட்டது. விச் பத்திரிகையிலிருந்து தனது தரமான உணவு தருவிப்பிற்காகவும் ஒரு கருத்தாய்வு சார்ந்த விருதை ஜெட் ஏர்வேஸ் வென்றுள்ளது.
ஜெட்லைட் (முன்னர் ஏர் சஹாரா என்றழைக்கப்பட்டது) மற்றும் ஜெட் ஏர்வேஸ் கனெக்ட் என்ற இரண்டு குறைந்த விலை விமான சேவைகளையும் ஜெட் ஏர்வேஸ் இயக்குகிறது.
 

IATA
9W
ICAO
JAI
Callsign
JET AIRWAYS
Founded1 April 1992
Commenced operations5 May 1993
HubsChhatrapati Shivaji International Airport (Mumbai)
Secondary hubs
Focus cities
Frequent-flyer programJetPrivilege
Airport loungeJet Lounge
AllianceEtihad Equity Alliance
Subsidiaries
Fleet size117 (Including Subsidiaries)
Destinations74[1]
Company sloganThe Joy of Flying
Parent companyTailwinds Limited
HeadquartersMumbai, India[2]
Key people
RevenueIncrease INR173 billion (US$2.8 billion) (2012)[5]
ProfitDecrease INR-14.20 billion (US$−230 million) (2012)
Employees13,945 (2012)
Websitewww.jetairways.com
www.jetkonnect.com

Saturday, October 15, 2011

பேஸ்புக் பயனாளர்களுக்கு உதவும் நீட்சி


FaceBook இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும் போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன.
இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப்படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.
ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது.
இதனை நீங்கள் தரவிறக்கி  நிறுவிக் கொண்டால் போதும். நீங்கள் பார்க்க விரும்பும் படங்களை பெரிதாக்கி பார்க்கலாம்.


குரோம் நீட்சி
பயர்பொக்ஸ் நீட்சி

அப்பிள் iphone 4s கைப்பேசியின் குறுகிய கால சாதனை



உலகின் முதனிலை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அப்பள் நிறுவனத்தின் iphone 4s கைப்பேசி விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

குறித்த கைப்பேசி இணையத்தில் விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்யப்பட்டு சில மணித்தியாலங்களில் மொத்த கையிருப்பிற்கும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அப்பள் நிறுவனத்தின் விற்பனை வரலாற்றில் iphone 4s கைப்பேசி புதிய சாதனை படைத்துள்ளது.

அடுத்த ஆண்டளவில் 100 மில்லியன் கைப்பேசிகள் விற்பனை செய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

போட்டி நிறுவனங்களின் கைப்பேசிகளை விடவும் இந்த ரக கைப்பேசிக்கு உலக சந்தையில் பாரிய கிராக்கி நிலவி வருவதாக நிறுவன நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்



வேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது.
பயோடேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான். அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.
நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன. இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.
அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.
பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
பக்காவான, செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து. அதையும் சுலபமாக, உடனடியாக செய்து தருகிறது.
இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை. அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம், கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.
பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம். துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.
ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான். அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன. பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம். இது முதல் படி தான். இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.
பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம். இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌
ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும். பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து. வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.
இணையதள முகவரி

ரூ. 40,000 கோடிக்கு ஸ்கைப்பை சொந்தமாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்



இன்டர்நெட் தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது. 

இன்டர்நெட் மூலமான தொலைபேசி சேவையில் முன்னணியில் இருப்பது ஸ்கைப். வீடியோ சேட், இன்டர்நெட்டிலிருந்து தொலைபேசியில் பேசுவது, இன்டர்நெட் மூலமான வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

உலகில் பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த சேவைகள்.

இந் நிலையில் இந்த நிறுவனத்தை ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது மைக்ரோசாப்ட். இதையடுத்து ஸ்கைப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டோனி பேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, ஸ்கைப் செயல்பாட்டை நிர்வகிப்பார்.

2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்கைப் நிறுவனத்தின் சேவைகளை உலகம் முழுவதும் 633 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Sunday, October 9, 2011

ஃபேஸ்புக்








ஃபேஸ்புக் (Facebook) அல்லது முகநூல் 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட்பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் சக்கர்பர்க் ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக் தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.




வகைதனியார்
நிறுவியதுகேம்பிரிஜ்,மாசசூசெட்ஸ்
(பெப்ரவரி 4, 2004)[1]
தலைமையகம்பாலோ ஆல்ட்டோ,கலிபோர்னியா
முக்கிய நபர்கள்மார்க் சக்கர்பர்க், நிறுவனர், அதிபர்
டஸ்டின் மாஸ்கோவிட்ஸ், துணை நிறுவனர்
செரில் சான்ட்பர்க், மூத்த நிர்வாக அதிபர்
வருமானம் 300 மில்லியன்அமெரிக்க டாலர்(2008 மதிப்பு)[2]
நிகர வருமானம்Red Arrow Down.svg -50 மில்லியன்அமெரிக்க டாலர்(2008 மதிப்பு)[2]
தொழில் புரிவோர்500 (March 2008)[3]
இணையத்தளம்facebook.com
இணையத்தள வகைசமூக வலையமைப்பு
விளம்பரம்Banner ads
பதிவுவேண்டியுள்ளது
தொடக்கம்பிப்ரவரி 2004
தற்போதைய நிலைActive

ஜூலியன் அசான்ச்

Julian Assange


பிறப்பு1971 (அகவை 39–40)
டவுன்ஸ்வில்,குயின்ஸ்லாந்து,ஆஸ்திரேலியா
விருதுகள்Economist Index of Censorship Award (2008),பன்னாட்டு மன்னிப்பு அவையின் ஊடக விருது (2009), சாம் ஆடம்ஸ் விருது (2010)
தொழில்விக்கிலீக்ஸ் ஆசிரியர், பேச்சாளர்.
பிள்ளைகள்டானியெல் அசான்ச்


ஜூலியன் பவுல் அசான்ச் (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார்.விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.
அசான்ச் 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார்.
அசான்ச் பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்தது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அசான்ச், இது விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறினார். இருப்பினும் 2010 டிசம்பர் 7ஆம் திகதி இவர் இலண்டனில் போலீசாரிடம் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார். டிசம்பர் 14 ,2010 அன்று இவர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும் இரண்டு நாள் கழித்தே 16 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.